தென் கொரியாவிற்கு விஜயம் செய்யும் ட்ரம்ப்... அதிரடியாக வட கொரியா செய்த சம்பவம்
தென் கொரியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்னர் கடலில் இருந்து ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது வட கொரியா.
ஆசிய-பசிபிக்
தென் கொரியாவில் புதன்கிழமை பிராந்திய தலைவர்கள் பலர் மாநாடு ஒன்றை முன்னெடுக்கின்றனர். இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் பின்னர் ட்ரம்பின் முதல் ஆசியப் பயணம் இதுவாகும். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் சார்பாக பல்வேறு உச்சிமாநாடுகள் மற்றும் கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் பிராந்தியத் தலைவர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார். குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை தென் கொரிய நகரமான கியோங்ஜுவுக்கு பயணப்படுகிறார்.
இந்த வார இறுதியில் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கொரிய தீபகற்பத்தின் மேற்கே கடலில் இருந்து தரைக்கு இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை ஒன்றை வட கொரியா செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.
ஏவுகணை சோதனை
குறித்த ஏவுகணையானது இலக்கைத் தாக்கும் வகையில் அதன் பாதை மற்றும் நேரத்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த க்ரூஸ் ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு சுமார் 7,800 வினாடிகள் பறந்தன.

வெளியான தகவலின் அடிப்படையில், ஏவுகணை சோதனையின் போது கிம் ஜோங் உன் சம்பவயிடத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது. ஏவுகணை சோதனை தொடர்பில் வட கொரியாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் பாக் ஜாங் சோன் தெரிவிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுத வலிமையை நடைமுறையில் வளர்ப்பதில் முக்கியமான வெற்றிகளை நாடு பதிவு செய்துள்ளது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |