போர்க்கப்பல் ஒன்றை அறிமுகம் செய்த வடகொரிய ஜனாதிபதி: காத்திருந்த அவமானம்
உலகுக்கு தனது பெருமையை பறைசாற்றுவதற்காக, போர்க்கப்பல் ஒன்றை அறிமுகம் செய்தார் வட கொரிய ஜனாதிபதி.
ஆனால், அந்தக் கப்பல் அவரது கண்ணுக்கு முன்னேயே நீரில் மூழ்கத் துவங்க கிம்முக்கு பெரும் அவமானமாகிவிட்டது.
வடகொரிய ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானம்
நேற்றையதினம், அதாவது, மே மாதம் 21ஆம் திகதி, தனது பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக, 5,000 டன் எடையுள்ள போர்க்கப்பல் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்.
ஆனால், கப்பல் கட்டும் தளத்திலிருந்து அந்த போர்க்கப்பல் விடுவிக்கப்படுவதில் ஏதோ தவறு ஏற்பட, அந்த போர்க்கப்பல் கிம் ஜாங் உன்னின் கண்களுக்கு முன்னாலேயே மூழ்கத் துவங்கியுள்ளது.
அவமானத்தால் துடித்த கிம்முக்கு கோபம் கொப்புளிக்க, அந்த தவறுக்குக் காரணமான அத்தனை அதிகாரிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், அறிவியலாளர்கள், வடிவமைத்தவர்கள், கப்பல் கட்டியவர்கள் என அனைவரும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க இருப்பதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது கப்பலில் ஏற்பட்ட கோளாறு என்றும், அதை சரி செய்துவிடலாம் என்றும் எடுத்துக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள கிம், இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம், அதற்குக் காரணமான ஒருவரையும் சும்மா விடமாட்டேன் என கொந்தளித்துள்ளதால், எத்தனை பேர் தலை உருளப்போகிறதோ தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |