ரூ 25,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்ட வடகொரிய ஹேக்கர்கள்
கடந்த 2017 முதல் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வடகொரிய ஹேக்கர்கள் திருடியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட தொகை
குறித்த தொகையானது வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 600 மில்லியன் டொலர் முதல் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை திருடியுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான நிதியில் பாதியளவுக்கு ஹேக்கர்களால் திருடப்பட்ட தொகையை பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் Moonstone Sleet, Jade Sleet, Sapphire Sleet மற்றும் Citrine Sleet என பல எண்ணிக்கையிலான புதிய வடகொரிய ஹேக்கர்கள் குழு செயல்பட தொடங்கியதாக மைக்ரோசாப்ட் அடையாளம் கண்டுள்ளது.
இந்த குழுக்கள் கிரிப்டோகரன்சி நிறுவனங்களை மட்டுமே குறி வைத்துள்ளனர். குறிப்பாக Moonstone Sleet குழுவானது தரவுகள் சேகரிப்பு மற்றும் நிதி ஆதாயம் அடைதல் ஆகிய இரண்டிற்கும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகள் மீது வைரஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.
இணையமூடாக அச்சுறுத்தல்
புதிதாக பல குழுக்களை வடகொரியா களமிறக்கியுள்ளதால், அதன் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது என்றே மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2017 முதல் இதுவரை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 2,52,03 கோடி அளவுக்கான கிரிப்டோகரன்சியை வடகொரியா கொள்ளையிட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா ஆதரிக்கும் நபர்கள், குறிப்பாக ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் தொடர்புடையவர்களால் இணையமூடாக அச்சுறுத்தல் வரலாம் என மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து வடகொரியாவின் ஹேக்கர்கள் குழுக்களை ஒழிக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |