இந்த ஆண்டில் இதுவரை ரூ 17,000 கோடி அளவுக்கு கிரிப்டோ கொள்ளையில் ஈடுபட்ட வட கொரியா
கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரிய ஹேக்கர்கள் 2025-ஆம் ஆண்டில் இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய அச்சுறுத்தலாக
இதுவரை கிரிப்டோவில் வடகொரிய ஹேக்கர்கள் கொள்ளையிட்ட மொத்தத் தொகை 6.75 பில்லியன் டொலர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், வட கொரிய ஹேக்கர்களின் கிரிப்டோ கொள்ளையில் ஆண்டுக்கு ஆண்டு 51% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி துறையில் 3.4 பில்லியன் டொலருக்கும் அதிகமான கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. வட கொரியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தாக்குதல் முன்னெடுக்கப்படுவதில்லை என்றாலும், கிரிப்டோ பாதுகாப்பில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வட கொரியா தற்போதும் நீடிக்கிறது.
வட கொரிய ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளை கொள்ளையிடாமல், கிரிப்டோ நிறுவனத்தின் சேவைகளை முடக்கி, நூதன கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்றே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மிகப்பெரிய கிரிப்டோ கொள்ளையாக பதிவு செய்யப்பட்டது ஐக்கிய அமீரகத்தில் இருந்து செயல்படும் Bybit கிரிப்டோ நிறுவனத்தின் 1.5 பில்லியன் டொலர் இழப்பாகும்.

சீன சேவைகள் ஊடாக
மட்டுமின்றி, பொருளாதார ரீதியாக வலுவான நிறுவனங்களை மட்டுமே இந்த ஆண்டு வட கொரிய ஹேக்கர்கள் தாக்கியுள்ளனர். இதனால், அதிக ஆதாயம் அடைந்துள்ளனர்.
கொள்ளையிட்ட கிரிப்டோவை சீன சேவைகள் ஊடாக உள்ளூர் பணமாக மாற்றியுள்ளனர். வட கொரியா தனது அரசின் முன்னுரிமைகளுக்கு நிதியளிக்கவும், சர்வதேச தடைகளைத் தவிர்க்கவும் கிரிப்டோகரன்சி திருட்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்,

இந்த அச்சுறுத்தல் வழக்கமான சைபர் குற்றவாளிகளை விட வேறுபட்ட விதிகளின்படி செயல்படுகிறது என்பதை தொழில்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றே ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2025ல் மட்டும் வட கொரியா 2 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது ரூ 17,922 கோடி அளவுக்கு கிரிப்டோ கொள்ளையில் ஈடுபட்டுள்ளது, பிறக்கும் புத்தாண்டில் கிரிப்டோ பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்களுக்கு சவாலாக அமையும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |