வட கொரியா முழுவதும் ராணுவத்தை முடுக்கிவிட்ட அதிபர் கிம்! வெளியான புகைப்பட ஆதாரம்
வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழுவதும் அந்நாட்டு ராணுவ மருத்துவர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் மே 12ம் திகதி முதல் கொரோனா தொற்று பதிவானதை அடுத்து நாடு முழுவதும் ஊரங்கை அமுல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
மே 16ம் திகதி நிலவரப்படி நாட்டில் 14,83,060 பேர் காய்ச்சலுடன் இருப்பதாகவும் மற்றும் 56 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வட கொரியாவில் 25 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6,63,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருவதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கிம் முன்நின்று நாட்டை வழிநடத்தி வருகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் வட கொரிய ராணுவ மருத்துவகளை முடக்கி விட கிம் உத்தரவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான வட கொரிய ராணுவ மருத்துவ பிரிவுகள் தலைநகர் பியோங்யாங்கில் அணி வகுத்து செல்லும் புகைப்படங்களை KCNA வெளியிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தலைமையில் ஒன்றுபட வேண்டும்! பெலாரஸ் வலியுறுத்தல்
நாட்டில் மருந்தகங்களைத் திறந்து வைக்கத் தவறியதற்காக சுகாதார அதிகாரிகளை கிம் கடுமையாக விமர்சித்தார்.
ஊடகங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள வட கொரிய அதிகாரிகள், மருந்தக தொழிற்சாலைகளில் மருந்துகள் உற்பத்தியை அதிகாரித்துள்ளனர்.