வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள்
North Korean state media have posted 'proof of life' images of dictator Kim Jong Un after wild rumours that the leader had died: கிம் ஜாங் உன் மரணமடைந்துவிட்டதாக பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, வட கொரிய அரசு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்
அமெரிக்காவில் வசிக்கும் சீன ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையவரான வான்ஜுன் ஜை (Wanjun Xie) என்பவர், வட்கொரிய ஜனாதிபதியாகிய கிம் ஜான் உங் (42) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

சனிக்கிழமை கிம்முக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சீன மருத்துவக்கல்லூரி ஒன்றிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று வடகொரியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிம் கோமாவுக்குள் சென்றுவிட்டதாகவும், அதைத்தொடர்ந்து பீஜிங்குக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனாலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார். +
அத்துடன், கிம்முடைய மரணத்தைத் தொடர்ந்து சீனா 9,000 படைவீரர்களை வடகொரிய தலைநகருக்கு அனுப்பியுள்ளதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்ட புகைப்படங்கள் வான்ஜுன் வெளியிட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் பரவத்துவங்கியுள்ள நிலையில், வடகொரிய அரசு, கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கிம் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக, வடகொரிய அரசின் ஊடக ஏஜன்சி, திங்கட்கிழமை, ஆடை மற்றும் காலணி பொருட்காட்சி ஒன்றில் கிம் பங்கேற்பதைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.