தென் கொரிய வீரர்களுடன் புகைப்படம் எடுத்த வட கொரிய வீரர்கள்.., கிடைக்க போகும் தண்டனை
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வட கொரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டதால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
செல்ஃபியால் வந்த வினை
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics) டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக் (Ri Jong-sik), கிம் கும் யோங் (Kim Kum-yong) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தென் கொரிய வீரர்களுடன் சிரித்துக்கொண்டே மேடையில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் தான் இப்போது பிரச்சனையாக மாறியுள்ளது.
போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே மற்ற நாட்டு வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பதக்கம் வென்று நாடு திரும்பிய அனைத்து வட கொரிய வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்பாட்டை மீறி தென் கொரிய வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |