300 உக்ரைனிய வீரர்களை கொன்று குவித்த வட கொரிய வீரர்கள்! குர்ஸ்க் பகுதியில் ரஷ்யா முன்னேற்றம்
குர்ஸ்க் பகுதியில் வட கொரிய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு ஏற்பட்ட கடுமையான இழப்பு
வட கொரிய ராணுவம் உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மீண்டும் கைப்பற்றி இருப்பதோடு, உக்ரைனிய ராணுவத்தின் மீது கடுமையான இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக ரஷ்ய டெலிகிராம் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவலில், டிசம்பர் 6ம் திகதி Plyokhovo பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
“புயல்” என்று விவரிக்கப்பட்ட இந்த தாக்குதலானது, 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் நீடித்ததாகவும், எந்த உக்ரைனிய கைதிகளும் இல்லாமல் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், ரஷ்யாவை ஆதரிக்கும் ஒரு அரசியல்வாதி இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார், இருப்பினும் அவரும் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
உக்ரைனில் வட கொரிய ராணுவத்தின் இருப்பு அமெரிக்காவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |