வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து: 15 பேர் வரை அதிரடி கைது!
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியில் தீ விபத்து
வடக்கு மாசிடோனியாவின் கோகனி (Kocani) நகரில் உள்ள பிரபலமான "பல்ஸ் இரவு விடுதியில்" (Pulse Night Club) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர தீ விபத்தில் குறைந்தது 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் பின்னணி
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிஎன்ஏ" (DNA) என்ற பிரபல ஹிப்-ஹாப் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
15 பேர் கைது
இந்த தீ விபத்து தொடர்பாக 15 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் "லஞ்சம் மற்றும் ஊழல்" (Bribery and Corruption) தொடர்பான சந்தேகங்கள் இருப்பதாக உள்துறை அமைச்சர் பான்ஸ் டோஸ்கோவ்ஸ்கி (Pance Toskovski) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |