பிரித்தானிய கடலில் பேரழிவு: நிறுத்தப்பட்ட தேடுதல் வேட்டை! மீட்பு நடவடிக்கைகளின் நிலை என்ன?
பிரித்தானியாவின் கிழக்கு யார்க்ஷயர் கடற்கரைக்கு அப்பால் வட கடலில் நிகழ்ந்த கப்பல் விபத்து காணாமல் போன நபரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்கு கப்பல் மோதியதில் இரு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
காலை 9:50 மணிக்கு நேர்ந்த இந்த கப்பல் மோதல், பெரும் மீட்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
விபத்தை தொடர்ந்து டஜன் கணக்கான பணியாளர்கள் தங்கள் கப்பல்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிரித்தானிய கடலோர காவல்படை துரிதமாக செயல்பட்டு 36 பேரை பத்திரமாக மீட்டது.
அமெரிக்க கொடி ஏந்திய ஸ்டெனா இம்மாக்குலேட்(Stena Immaculate) என்ற எண்ணெய் டேங்கரில் இருந்த 23 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
போர்த்துகீசிய கொடி ஏந்திய சோலோங்(Solong) என்ற சரக்கு கப்பலில் இருந்த 14 பணியாளர்களில் ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ளார்.
விரிவான தேடுதல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடலோர காவல்படை இரவு 9:40 மணியளவில் தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கப்பல்களின் நிலை
அமெரிக்க கடற்படைக்கு குறுகிய கால வாடகைக்கு இயங்கி வந்த ஸ்டெனா இம்மாக்குலேட் கப்பல் ஜெட் எரிபொருளை கொண்டு சென்ற நிலையில் இந்த தீ விபத்து கப்பல் பலத்த சேதமடைந்தது.
சோலோங் சரக்கு கப்பல் 15 கொள்கலன்களில் சோடியம் சயனைடு மற்றும் குறிப்பிடப்படாத அளவு ஆல்கஹால் ஆகியவற்றை கொண்டு சென்றது.
இரண்டு கப்பல்களும் குறிப்பிடத்தக்க அளவிலான மிகப்பெரிய தீ பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
விசாரணை மற்றும் எச்சரிக்கை
கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள், ஆரம்பக்கட்ட விசாரணையில் எந்த தவறான நடவடிக்கைகளும் இல்லை என்று தெரிவித்துள்ளன.
கடலோர காவல்படை உடனடியாக அருகிலுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |