1,000 Volvo கார்கள்.., 330 மில்லியன் டொலரை தராமல் ஸ்வீடனை ஏமாற்றும் வடகொரியாவின் தந்திரம்
ஸ்வீடனிலிருந்து 1,000 வோல்வோ கார்களை இறக்குமதி செய்த வடகொரியா, 49 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கான பணத்தைக் கொடுக்காமல் இருக்கிறது.
1,000 வோல்வோ கார்கள்
கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நாடு வடகொரியா. அங்கு ஒரு தவறு செய்தால் மரண தண்டனை கூட கொடுக்க தயங்கமாட்டார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இப்படிப்பட்ட நிலையில், வடகொரியாவை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.
கடந்த 1970 -ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வலுவான நாடாக மாற்றம் அடைந்த வடகொரியா, தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த, மேற்கத்திய நாடுகளிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்தது.
அந்தவகையில், ஸ்வீடன் நாட்டிலிருந்து 1,000 வோல்வோ கார்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று 1974 -ம் ஆண்டு வடகொரியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதனை அப்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல்-சங் ஒப்பந்தம் செய்தார்.
அதே போல அப்போதைய மதிப்பில் 73 மில்லியன் டொலர் மதிப்புடைய அனைத்து கார்களும் அந்த ஆண்டின் இறுதியில் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.
பணம் கொடுக்கவில்லை
ஆனால், தற்போது 49 ஆண்டுகளாகியும் ஸ்வீடனுக்கு வடகொரியா பணம் கொடுக்கவில்லை. இதில், ஸ்வீடன் அரசானது தனது சொந்த நிதியிலிருந்து கார் நிறுவனத்திற்கு பணத்தை கொடுத்துள்ளது. இது குறித்து, ஸ்வீடன் அதிகாரிகள் ஆண்டுக்கு இரண்டு முறை பில் அனுப்பியும் அதுகுறித்து வடகொரியா கண்டுகொள்ளவில்லை.
In the 1970s, North Korea ordered 1,000 Volvo cars from Sweden. The cars were shipped & delivered but North Korea just didn't bother paying & ignored the invoice. Till this day the bill remains unpaid making it the largest car theft in history. pic.twitter.com/SYbubt8due
— Historic Vids (@historyinmemes) February 1, 2023
தற்போது, வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டிய மதிப்பு 330 மில்லியன் டொலராகும். ஆனால், இன்று வரையும் அந்த கார்களை வடகொரியா பயன்படுத்துகிறது.
இது தொடர்பாக, ஹிஸ்டரி விட்ஸ் என்ற ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "1970 -களில் வட கொரியா ஸ்வீடனிடம் இருந்து 1,000 வால்வோ கார்களை ஆர்டர் செய்தது. கார்கள் அனுப்பப்பட்டு டெலிவரி செய்யப்பட்டன, ஆனால் வட கொரியா பணம் செலுதாமல் பில்லை புறக்கணித்தது.
இன்று வரை பில் செலுத்தப்படாமல் உள்ளது. இது வரலாற்றில் மிகப்பெரிய கார் திருட்டு" என்று குறிப்பிட்டு கார் குறித்த வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பகிர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |