நார்வேயில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சாலை விபத்து: குறைந்தது 3 பேர் உயிரிழப்பு
நார்வேயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து விபத்து
நார்வேயில் நெஞ்சை உலுக்குகிற வகையில் ஏற்பட்டுள்ள பேருந்து விபத்தில், குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹாட்செல்(Hadsel) மாவட்டத்தில் 13:30 மணியளவில் (12:30 GMT) நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது பேருந்து சாலையில் இருந்து தடம் மாறி Åsvatnet ஏரியில் பகுதியாக மூழ்கியது.
முதற்கட்ட தகவல்களின் படி, விபத்து நேரத்தில் சுமார் 58 பயணிகள் பேருந்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.
நார்வேயன் ரெட் கிராஸ் E10 சாலையில் நடந்த கடுமையான பேருந்து விபத்துக்கு பிறகு சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்பு குழுக்கள் விரைந்தனர்.
விபத்தின் காரணம் மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பலத்த பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் அப்பகுதியில் சவாலான வானிலை நிலவி வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |