பிரித்தானியாவுடன் 10 பில்லியன் பவுண்டு ஒப்பந்தம்: Type-26 போர்கப்பல்களை வாங்கும் நாடு
பிரித்தானியாவின் Type-26 போர்கப்பல்களை வாங்க மற்றோரு ஐரோப்பிய நாடான நோர்வே ஒப்பந்தம் செய்துள்ளது.
நோர்வே அரசு அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பிரித்தானியாவுடன் 10 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள முக்கிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானியாவின் BAE Systems நிறுவனம் 5 முதல் 6 Type-26 போர்கப்பல்களை (Frigates) நோர்வேவிற்காக உருவாக்கவுள்ளது.
இது நோர்வே பாதுகாப்பு வரலாற்றில் மிகப்பாரிய முதலீடாகும். இந்த கப்பல்கள் 2030 முதல் வரிசையாக வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானியாவிற்கு பெரும் பொருளாதார ஆதாயம் கிடைக்கும்.
மேலும், 4,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2,000 வேலைகள் BAE Systems நிறுவனத்தில் கிளாஸ்கோ கப்பல் தொழிற்சாலையில் உருவாகும்.
பிரித்தானியாவுடனான நெருக்கமான கூட்டாண்மை, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் Type-26 போர்கப்பல்களின் திறன்கள் தான் இந்த தெரிவிக்க காரணம் என நோர்வே பிரதமர் ஜோனாஸ் ஸ்டோரே (Jonas Gahr Store) தெரிவித்துள்ளார்.
Norway will procure British Type-26 frigates 🇳🇴🇬🇧
— Norwegian Ministry of Defence (@Forsvarsdep) August 31, 2025
The Norwegian government has selected The United Kingdom as a strategic partner, and will procure British frigates for the Royal Norwegian Navy.
This will be the largest procurement for the Norwegian Armed Forces ever PM… pic.twitter.com/QJ4L8n4vdR
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Norway UK defence deal, Type-26 frigates BAE Systems, 10 billion pounds warship contract, NATO naval upgrade, Norway British warships, Keir Starmer defence exports, BAE Systems Glasgow jobs, Norway military investment