நோர்வே செஸ் சம்பியன்ஷிப் போட்டி: 3ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா!
நோர்வே செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
12வது நோர்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஸ்டாவன்ஞர் நகரில் நடைப்பெற்றது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வர்.
?place in @NorwayChess Played some exciting games. Enjoyed the Armageddon format!
— Praggnanandhaa (@rpraggnachess) June 9, 2024
Thanks to all the fans for the support throughout the event! Wonderful organization and Thanks to the organizers for making our stay pleasant and comfortable?
?@StevBonhage / @NorwayChess pic.twitter.com/gsWawTvkHV
இந்நிலையில் இந்த தொடரின் ஆண்கள் பிரிவின் கடைசி சுற்றில் முன்னணி வீரரான நோர்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் அமெரிக்காவின் பேபியானோ கரோனாவிற்கு எதிராக மோதினார்.
இந்த போட்டி கிளாசிக்கல் சுற்றில் சமநிலையில் முடிந்து ஆர்கமெடானுக்கு சென்றது.
இதில் அபாரமாக செயல்பட்ட கார்ல்சென் பேபியானோ கரோனாவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இவரது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கை 17.5 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கார்ல்சென் 6வது முறையாக கைப்பற்றினார்.
நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2வது இடமும், இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |