ரஷ்ய கப்பலை சிறைபிடித்த நார்வே அதிகாரிகள்: இழப்பீடு வழங்க கோரி நடவடிக்கை
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர்.
ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்பு
ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால்பார் (Svalbard) தீவுக் கூட்டத்தில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முடக்கியுள்ளனர்.
இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையானது, உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான Naftogaz-க்கு வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர் இழப்பீடு தொகையை ஈடுகட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: Sergei Malgavko/TASS/picture alliance
கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததை அடுத்து, Naftogaz சொத்துகளை ரஷ்யா தன்வசப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய கப்பலின் விவரம்
சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய கப்பல் ப்ரொபசர் மோல்ச்சனோவ்(Professor Molchanov) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறைபிடிப்பு தொடர்பான உத்தரவை பெறுவதற்கு முன்பு அமெரிக்க சட்ட நிறுவனமான Covington பல மாதங்களாக இந்த கப்பலை கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரொபசர் மோல்ச்சனோவ் என்ற ரஷ்ய கப்பல் ரஷ்ய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பாரெண்ட்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |