நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்
நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.
இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்
வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid ) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |