நள்ளிரவில் சூரியன் உதிக்கும்! நோர்வே சுற்றுலா தளங்கள்
ஐரோப்பாவின் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய தேசம் நோர்வே.
இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் என்பவற்றையும், சுவீடன், பின்லாந்து, ரஷ்யா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.
ஆர்ட்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளதால், நள்ளிரவில் சூரியன் ஒளிரும், ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக வீசக்கூடியது.
போதுமான மழை வளமும் இருப்பதுடன் உப்பு நீர் ஏரிகள், மலைகள் என சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது நோர்வே.
பூமியின் வடமுனையில் சூரிய ஒளியை பார்த்து ரசிக்கும் நாடுகளில் நோர்வே முதன்மையானது.
இந்நாட்டின் மொத்தப்பரப்பில் ஐந்தில் மூன்று பங்கு மலைகளால் ஆனது, உலகிலேயே மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடாகவும் இது விளங்குகிறது.
நான்கில் ஒரு பங்கு காடுகளாகவும் இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இங்கு மழை வளம் அதிகம், இயற்கை வாயு, உருக்கு, செம்பு, துத்தநாகம், நிலக்கரி போன்றவை வளங்கள்.
இதுதவிர சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிக பாறை எண்ணெய் பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடும் இதுவாகும்.
Oslo
நோர்வேயின் தலைநகரம் Oslo, பரபரப்பான நகர வாழ்க்கைக்கு நடுவே இயற்கையை ரசிக்கும் அழகை இங்கு காணலாம்.
சைக்கிளிங், பனிச்சறுக்கு என சாகச விளையாட்டு பிரியர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.
அழகான கடற்கரையுடன் சிறந்த ரிசார்டுகளில் பொழுதை கழிக்கலாம்.
இதுவிர Hadeland மற்றும் Kistefos Museumகள் பாரம்பரியத்துடன் கலை அழகை கண்டு வியக்கலாம்.
Tromso
வடக்கு நோர்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நகரம் இதுவாகும், நள்ளிரவின் சூரியனின் அழகை இங்கு காணலாம்.
பழங்கால மரங்களால் ஆன கட்டிடங்கள், கோடைகாலத்தின் போது பாரம்பரியமிக்க நிகழ்வுகள் என நோர்வேயின் கலாசாரத்தை பற்றி அறியலாம்.
Lyngenfjord பகுதியில் ski touring, biking மற்றும் hiking போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
இதுதவிர Senja, Kvaløya மற்றும் Sommarøy போன்ற தீவுகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
Lofoten and Nordland
ரம்மியமான கடற்கரைகள், மீன்பிடி கிராமங்கள், மலை சிகரங்கள் என கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலம் இதுவாகும்.
உலகின் மிகச்சிறந்த டிரைவ் அனுபவத்தை இங்கு பெறலாம், இங்குள்ள Bodø நகரம் 2024ம் ஆண்டில் ஐரோப்பிய கலாசாரத்தின் தலைநகராக இருக்கும் என கூறப்படுகிறது.
Bergen and the western fjords
மிக பிரபலமான நீளமான fjordsகளுடன் இயற்கை அழகில் மிளிர்கிறது Bergen.
நோர்வேயின் வடக்குபகுதி உங்களுக்கு மிக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு கண்களுக்கு விருந்தளிக்கும் பல fjords உள்ளன.
யுனேஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட Nærøyfjord, 17 கி.மீ நீளம் கொண்டது. படகு பயணத்தின் மூலம் அழகை கண்டு வியக்கலாம்.
The Geirangerfjord
யுனேஸ்கோவின் பாரம்பரிய தளத்தில் The Geirangerfjordம் ஒன்றாகும்.
15 கி.மீ நீளம் கொண்ட The Geirangerfjordல் நீர்வீழ்ச்சிகள், மலை முகடு, சிறு பண்ணைகள் என ஒட்டுமொத்த அழகை தாங்கி நிற்கிறது.
fjordன் ஒவ்வொரு பக்கத்திலும் நீர்வீழ்ச்சிகள் உண்டு, பல இடங்களில் புகைப்படங்களை எடுப்பதற்கென்று பிரத்யேக கட்டமைப்புகளும் உண்டு.
Stavanger
நோர்வேயின் மூன்றாவது மிகப்பெரிய நகரம் இதுவாகும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட மரத்தால் ஆன வீடுகளை இங்கு காணலாம்.
இந்நகரை சுற்றுவதன் மூலம் நோர்வேயின் பழங்கால பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளும்.
20ம் நூற்றாண்டுகளில் எண்ணெய் தொழிற்சாலைகளின் அதிகரிப்பால் மக்கள் குடியேறத் தொடங்கினர், தற்போது Oil Capital of Norway என்றழைக்கப்படுகிறது.