நாஸ்ட்ராடாமஸின் கொள்ளை நோய் தொடர்பான தீர்க்கதரிசனம்... 2025 ல் உண்மையாகலாம்
கோவிட் பெருந்தொற்றை விட 10 மடங்கு அதிக இறப்பு விகிதம் கொண்ட ஒரு தொற்றுநோய் இங்கிலாந்து முழுவதும் பரவக்கூடும் என்ற சில்லிட வைக்கும் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.
நோஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம்
சமீபத்தில் வௌவால்களுக்குள் வாழும் ஒரு புதிய கொரோனா வைரஸ் மாதிரி பற்றிய திகிலூட்டும் கண்டுபிடிப்புடன் நோஸ்ட்ராடாமஸ் முன்னர் பதிவு செய்துள்ள கணிப்பும் ஒத்துப்போகிறது என்பதே இந்த அச்சத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்து உக்கிரமான போரால் பாதிக்கப்படும் என்றும் பழைய பிளேக் நோய் மீண்டும் அந்த நாட்டை மொத்தமாக வதைக்கக் கூடும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் 14 ஆம் நூற்றாண்டில் தீர்க்கதரிசனம் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள கொள்ளை நோயும் 2025ல் உண்மையாகலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று மனிதர்கள் மூலம் பரவும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு புதிய வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர், இது கோவிட் பெருந்தொற்றை விட மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும்.
நோஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ள கணிப்பு என்பது, இங்கிலாந்து மிகவும் கொடூரமான போர்களால் குறிக்கப்படும், உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து எதிரிகள் எழுவார்கள். ஐரோப்பிய மக்கள் கண்கூடாக காண்பார்கள்.
மூன்றில் ஒரு பங்கை
கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய கொள்ளைநோய் திரும்பும், வானத்தின் கீழ் இதைவிடக் கொடிய எதிரி இருக்க வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் கோவிட் தொற்றுநோயின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் வைராலஜி நிறுவனத்தின் வைராலஜிஸ்டுகள் HKU5-CoV-2 என்ற தொற்றுநோயை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் வௌவால்களில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனிதர்களுக்கும் பரவும் சாத்தியம் மிக மிக அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. மட்டுமின்றி, MERS என்ற வரைசுடன் HKU5-CoV-2 வைரசை ஒப்பிடுகின்றனர்.
கோவிட் பெருந்தொற்றின் இறப்பு விகிதம் 3.4 சதவிகிதம் என்றால், MERS வைரஸ் இறப்பு விகிதம் என்பது 33.3 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது. இதனால் கொடிய HKU5-CoV-2 என்ற வைரஸ் மூச்சுத் திணறல், வாந்தி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கை பலிவாங்கிவிடுகிறது.
கோவிட் பரவுவது போன்றே, HKU5-CoV-2 வைரசும் பரவும் என்பதால், தப்பிக்க வழியில்லை என்றே விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர். MERS தொற்றால் அமெரிக்காவில் இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். 2014 மே மாதம் அவர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணப்பட்டதால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |