நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு ஒன்று நிறைவேறியது: மூன்று நாடுகளை புரட்டியெடுத்த சம்பவம்
2024ல் பேய் மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது நிறைவேறியுள்ளதுடன், இறப்பு எண்ணிக்கையும் 300 கடந்துள்ளது.
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
கடந்த பல ஆண்டுகளாக நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல்வேறு சம்பவங்கள் நிறைவேறியுள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னரே நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.
ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதியின் படுகொலை, கோவிட் பெருந்தொற்று, 2022ல் தொடங்கிய விலைவாசி உயர்வு என பல முதன்மையான கணிப்புகளை அவர் பதிவு செய்திருந்தார்.
தற்போது 2024 தொடர்பில் அவர் கணித்துள்ள சம்பவம் ஒன்று நிறைவேறியுள்ளது. வறண்ட பூமி மேலும் வறண்டு போகும், அதைக் காணும்போது பெரும் வெள்ளம் ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தார்.
இது தற்போது சீனா மற்றும் இந்தியாவில் நிறைவேறியுள்ளதாக கூறுகின்றனர். அதுவும் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம் பதிவாகி மகக்ளை வதைத்த சில நாட்களில் பேய் மழையுடன் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பலியானவர்கள் எண்ணிக்கை 330
மட்டுமின்றி, இறப்பு எண்ணிக்கையும் 300 கடந்துள்ளது. ஆண்டின் இந்த நேரம் ஆசியாவில் பருவமழை மற்றும் சூறாவளி பருவமாகும், மேலும் காலநிலை மாற்றம் இத்தகைய புயல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
கனமழையால் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம், பயிர்கள் நாசம், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் பறிபோயுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் மழை மெற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 330 என தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மழை மற்றும் புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30 கடந்துள்ளது. தைவானில் 10 பேர்கள் இறந்துள்ளனர். சீனால் இந்த ஆண்டு இதுவரை 25 பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |