இந்த 4 உணவுகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கவே கூடாதாம்: ஏன் தெரியுமா?
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் தண்ணீர் குடிக்கவே கூடாது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனாலும் சாப்பிடும்பொழுது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
சாப்பிடும்பொழுது அல்லது சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் தண்ணீர் அருந்தினால் உடல் ஒவ்வாமை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில், சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கவே கூடாத 4 உணவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1.காரமான உணவுகள்
காரமான உணவுகளை சாப்பிடும்பொழுது அந்த காரத்தை குறைக்க நாம் வேகமாக தண்ணீர் குடிப்போம்.
ஆனால் இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து காரம் வாய்முழுக்க பரவி எரிச்சல் உணர்வை அதிகரிக்கும். மேலும் வயிறு உப்புசம் ஏற்படும்.
2. கொழுப்பு உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டவுடன் ஏற்கனவே நம் வயிறு நிறம்பிய உணர்வை தரும்.
அத்துடன் அதிகளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிறு மந்தமாகி, நீண்ட நேரம் செரிமானம் ஆகாமல் போய்விடும்.
3.கார்பனேடட் பானங்கள்
சாப்பிட்டு முடிந்தவுடன் தண்ணீர் அல்லது கார்பனேடட் பானங்களை குடிக்க கூடாது. ஏனெனில் இது வயிறு உப்புசம் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும், கார்பனேடட் பானங்கள் வயிறு முழுக்க நிரம்பி செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
4. முழு சாப்பாடு
எப்பொழுதும் வயிறு நிரம்பி சாப்பிட்ட பிறகு உடனடியாக தண்ணீர் அருந்த கூடாது. ஏனெனில் இது வயிற்றில் இன்னும் கூடுதல் தொந்தரவாக அமையும்.
அடுத்து எப்போது செரிமானம் ஆகும் என்ற ஏக்கத்தை நம் மனதில் வரவழைத்துவிடும்.
தண்ணீர் எப்போது குடிக்கலாம்?
சாப்பிட்ட உடனேயே அதிகப்படியான தண்ணீரை அருந்தும் பட்சத்தில், நம் உடலானது செரிமானத்திற்கு வெளிப்படுத்திய அமிலங்கள் நீர்த்துப் போகும். இதனால் செரிமானம் இன்றி தவிக்க நேரிடும்.
இதேபோல சாப்பிட்ட பிறகு பழ ஜூஸ் வகைகளையும் அருந்தக் கூடாது.
LAFLOR / GETTY IMAGES
சாப்பிட்ட பிறகு குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரையில் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்தினால் நம் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள அது உதவியாக அமையும்.
அதேபோல உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் அருந்தக் கூடாது.
மேலும், சாப்பிடும்போது தவிர்க்க முடியாத சூழலில் தண்ணீர் அருந்த வேண்டியிருந்தால் உதடுகள் நனையும் அளவு கொஞ்சமாக குடித்தால் போதுமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |