நாளை கடைசி நாள்! வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலையா.. இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். அதாவது 2022-23 ஆம் ஆண்டின் வருமான வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர்- ஐ தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
நாளை கடைசி நாள்
கடைசி நேரம் என்பதால் அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஐடிஆர் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் இதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
அதனால், எஃப்ஒய்23க்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. அதனை எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
STEP 1
நீங்கள் உங்களுது ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறைக்கு முன் படிவம் 16, படிவம் 26ஏஎஸ், படிவம் 16 ஏ, வரி சேமிப்புக்கான ஆதாரம், வங்கி கணக்கு விவரங்கள், டிடிஎஸ் சான்றிதழ், வருமான வரி விவரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பிரிவு 80சி-ன் கீழ் வரி சேமிப்பு முதலீடுகள், பிரிவு 80டி-ன் கீழ் செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள், பிரிவு 80ஜி-ன் கீழ் செய்யப்பட்ட நன்கொடைகள் ஆகியவை இருந்தால் அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
STEP 2
இரண்டாவது படியாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். வருமானவரி போரட்டலுக்கு (https://www.incometax.gov.in/iec/foportal/) செல்ல வேண்டும்.
மேலும், நீங்கள் புதிய பயனராக இருந்தால் பான் கார்டை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அதுவே உங்களது யூசர் ஐடி ஆக பயன்படுத்தப்படும்.
STEP 3
மூன்றாவதாக லாக் இன் செய்ய வேண்டும். அதாவது ரிஜிஸ்டர் செய்த பின்னர் உங்களது யூசர் ஐடி, கடவுச்சொல், கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.
STEP 4
நான்காவது படியாக ஐடிஆர் தாக்கல் செய்ய தொடங்க வேண்டும். இ-ஃபைல் மெனுவை (e-File Menu) கிளிக் செய்து, இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் என்கிற லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அசெஸ்மென்ட் இயர் (Assessment Year) என்பதை கிளிக் செய்து , ஐடிஆர் ஃபார்ம் நம்பர் (ITR form Number) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் ஆன்லைனில் தாக்கல் செய்பவர்கள் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
பின்பு, பைலிங் டைப் என்பதை தேர்தெடுக்க வேண்டும். அதில் ஒரிஜினல்/ ரிவைஸ்டு ரிட்டர்ன் என்பதை தேர்ந்தெடுத்து சப்மிஷன் மோடில் ப்ரீபேர் அன்ட் சப்மிட் ஆன்லைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, கண்டினியூ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
STEP 5
ஐந்தாவது படியாக விவரங்களை நிரப்ப வேண்டும். அதாவது, மேற்கூறிய 4 படிகளையும் பூர்த்தி செய்த பின்பு வழிமுறைகளை சரியாக படிக்க வேண்டும். பின்பு, ஆன்லைன் ஐடிஆர் படிவத்தின் பொருந்தக்கூடிய தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
STEP 6
ஆறாவது படியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். அதற்கு, ஐடிஆர் படிவத்தினை சமர்ப்பித்த பின்பு டேக்சஸ் பெயிட் அன்ட் வெரிஃபிகேஷனில் சரிபார்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் கீழ் இருக்கும் ஆதார் ஓடிபி மற்றும் மின்னணு சரிபார்ப்பு குறியீடு வழியாக உங்களது வருமான வரி ரிட்டனை இ வெரிஃபிகேஷன் செய்யலாம்.
STEP 7
இறுதியாக சமர்ப்பித்து உறுதி செய்ய வேண்டும். இதற்கு ப்ரீவியூ அன்ட் சப்மிட் என்பதை கிளிக் செய்து ஐடிஆர்-ல் கொடுக்கப்பட்ட எல்லா விவரங்களையும் சரிபார்த்த பின்னர் சப்மிட் செய்ய வேண்டும்.
பின்பு, உங்களின் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்துதல் மெசேஜ் வரும். இதனையடுத்து, நீங்கள் வருமானவரி போரட்டலுக்கு சென்று ஸ்டேட்டஸை செக் செய்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |