விற்பனைக்கு அல்ல... எலான் மஸ்க் கருத்துக்கு தக்க பதிலடி அளித்த தீவு நாடு
சீனாவின் ஒருபகுதி தான் தைவான் என குறிப்பிட்ட உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்துக்கு அந்த தீவு நாடு தக்க பதிலடி அளித்துள்ளது.
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி
உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் எலான் மஸ்க், சீனாவின் ஒருபகுதி அல்ல தைவான், அத்துடன் கண்டிப்பாக தைவான் விற்பனைக்கும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ காட்டமாக பதிலளித்துள்ளார்.
@reuters
இந்த வாரம் நடந்த ஒரு வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட எலான் மஸ்க், தைவானை ஹவாயுடன் ஒப்பிட்டு, தீவு நாட்டினை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவும் தங்களின் பிராந்தியம் என்றே தைவானை சமீப காலமாக குறிப்பிட்டு வருகிறது. அத்துடன் தைவானை சுற்றி அடிக்கடி போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்களால் போர் ஒத்திகையும் முன்னெடுத்து வருகிறது.
சுதந்திரம் விற்பனைக்கு அல்ல
தைவானைச் சுற்றி சீனா தமது இராணுவ வலிமையை வெளிக்காட்டும் வழக்கமான நிகழ்ச்சியாக இது மாறிவிட்டது. இதனிடையே, தைவான் தனது கடற்பகுதியில் 40க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்களையும், சுமார் 10 கப்பல்களையும் அடையாளம் கண்டதாக கூறியுள்ளது.
தைவான் தொடர்பில் சீனாவுக்கு ஆதரவாக எலான் மஸ்க் கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த அக்டோபர் மாதம், இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் பதட்டத்தை தணிக்க, தைவான் மீது சீனாவுக்கு சில உரிமைகளை அளிப்பதால் தீர்வு கிடைக்கும் என்றார்.
மேலும், இரு நாடுகளும் விரைவில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். எலான் மஸ்கின் கருத்தை அமெரிக்காவுக்கான சீனத் தூதர் பாராட்டியிருந்தார். ஆனால் அப்போது சுதந்திரம் விற்பனைக்கு அல்ல என தைவான் தூதர் பதிலளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |