பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்யமாட்டேன்: ஆர்சிபி ரசிகையின் பரிதாப நிலை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைப்பெற்ற ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில், பெண் ரசிகை ஒருவர் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என பதாகையுடன் நின்றது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலக அளவில் நடைபெறும் லீக் போட்டிகளில் இந்தியாவில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டிகள் தான் அதிக அளவில் உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த லீக் போடியாக கருத்தப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் என்பது வெறும் விளையாட்டு போட்டியாக மட்டும் கருத்தப்படாமல் அது மக்களின் உணர்வுகளுடன் கலந்த ஓர் உணர்வாகவே கருதுகின்றனர்.
RCB Fan's & Their Expectations ?#EeSalaCupNamde #RCBvsRR pic.twitter.com/VIWODY8Xpz
— Sam Rajput (@rajputsam01) May 27, 2022
உதாரணமாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் என்பது வெறும் விளையாட்டு போட்டி மட்டுமல்ல அது இந்திய மக்களின் மதம் போன்றது என பிரபல பாகிஸ்தான் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், இத்தகைய கூற்றுகளை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நடைப்பெற்ற ஐபிஎல்-லின் 2022ம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பெண் ரசிகை ஒருவர் ”ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்ய மாட்டேன்” என பதாகையுடன் நின்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை கிழப்பியதுடன் இணையத்திலும் வைரல் ஆகி வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்: சதம் விளாசி பெங்களூரு அணியை அலறவிட்ட ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் போட்டியில் பல முறை பிளே-ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் இந்த ஆண்டாவது கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த ஆண்டும் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வரை முன்னேறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பது பதாகை தாங்கிய அந்த ரசிகையின் திருமண முடிவை ஒத்திவைத்துள்ளது.