ஆர்சிபி என்ற கோஷமிட்ட ரசிகர்கள்…மாறாக விராட் கோலி செய்த செயல்: வைரல் வீடியோ
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆர்சிபி என்று கத்திய ரசிகர்களை பார்த்து இந்தியா என்ற செல்லுங்கள் என கூறிய விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.
முன்னிலையில் இந்திய அணி
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி டெஸ்ட் உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
Crowd was chanting 'RCB, RCB' - Virat Kohli told to stop it and chant 'India, India'. pic.twitter.com/kMd53wbYRU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மைதானத்தில் மார்ச் 1ம் திகதி தொடங்கவுள்ளது.
இந்தியா என்று சொல்லுங்கள்
இதற்கிடையில் டெல்லி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பார்த்து ஆர்சிபி, ஆர்சிபி என்று ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது ரசிகர்களை திரும்பி பார்த்த விராட் கோலி, அவர்களை அதட்டி இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக் காட்டினார். அதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அதன் பின்னர் இந்தியா, இந்தியா என்று கத்தினர்.
இந்நிலையில் விராட் கோலியின் இந்த செயலை பலரும் பாராட்டி சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.