ஹவுதி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை... சவுதி அரேபியாவுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா
US opts not to back Saudi Arabia in Yemen: ஏமன் விவகாரத்தில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அமெரிக்கா முடிவு.
மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹவுதி தலைவர்களுடன் நடந்தச் சந்திப்பை அடுத்து, ஏமன் விவகாரத்தில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஹவுதிகள் உறுதி
2025-இல் இரு தரப்பினருக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், செங்கடலில் அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் ஹவுதிகள் தரப்பு அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.

மேலும், யேமனை சவுதி முற்றுகையிட்டிருப்பதால், அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்து மட்டுமே இலக்காகக் கருதப்பட்டதாக ஹவுதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காக, யேமனின் மேற்குக் கடற்கரை வழியாக ஹவுதிகளின் முன்னேற்றத்தை டொனால்ட் ட்ரம்ப் கண்டித்ததையும், ஆனால் இதுவரை சவுதி அரேபியாவிற்கு ஆதரவான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் நிராகரித்ததையும் இந்தச் சந்திப்பு விளக்கமளிக்கிறது.
ஹவுதிகளுக்கு ஆதரவளிக்கும் ஈரானுடன், அமெரிக்கா ஏற்கனவே மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுவரும் ஒரு மோதலில் சிக்கி வெளியேற முடியாமல் திணறி வருகிறது.
மார்ச் 2025-ல் ஹவுதிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா முத்திரை குத்தியது; இருப்பினும், அண்மைக்காலத்தில் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
ஹவுதிகளுடன் அமெரிக்கா நேரடித் தொடர்பில் இருப்பதை அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் திங்களன்று உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், நேரடியாக ஹவுதிகள் விவகாரத்தில் ஈடுபட அமெரிக்கா மறுத்துவிட்ட நிலையில், ஏமனின் எதிர்கால நிர்வாகம் குறித்து ஹவுதிகளுடன் ஒரு ராஜதந்திரத் தீர்வை எட்டுவதற்கோ அல்லது பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு பிராந்தியக் கூட்டணியை உருவாக்கி ஹவுதிகளைப் பின்வாங்கச் செய்வதற்கோ சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் மின்னல் வேகத் தாக்குதல் ஒன்றை நடத்திய ஹவுதிகள், செங்கடல் கடற்கரையோரம் உள்ள மேற்கு ஏமனின் பரந்த பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதனிடையே, இப்பகுதியில் ஹவுதிகளுக்கு எதிரான மக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியாக, செவ்வாய்க்கிழமையன்று புனித நகரமான மெக்கா மீது ஹவுதிகள் ட்ரோன் ஒன்றை ஏவியதாகவும், ஆனால் சவுதி பாதுகாப்புப் படைகளால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் சவுதி ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்தது.
நூற்றாண்டின் பொய்
மெக்கா மீதான எந்தவொரு தாக்குதலும் அது சிவப்பு எச்சரிக்கைக்கு ஒப்பானது என்று சவுதி அரேபியா கூறியதுடன், ஏடனில் உள்ள ஐ.நா-அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கம் மற்றும் 57 நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் நீண்ட அறிக்கைகளில் இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட்டது.
ஆனால், ஹவுதிகள் தலைமை அந்த குற்றச்சாட்டை மொத்தமாக நிராகரித்ததுடன், நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் என்றும் குறிப்பிட்டது. மேலும், இது போன்ற இத்துபோன பொய்கள் முன்பும் பயன்படுத்தப்பட்டவை என்றும், அவை யாரையும் ஏமாற்றவில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஹவுதி அமைப்பின் வெளிவிவகார துணை அமைச்சர் அப்துல் வஹித் அபு ராஸ் தெரிவிக்கையில், இரு புனித மசூதிகள் அமைந்துள்ள பூமியை ஒழுக்கக்கேடு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குத் திறந்துவிட்டவர்களும், சியோனிச யூதர்களின் வருகையால் அப்பூமியை அசுத்தப்படுத்தியவர்களுமே மெக்கா, மதீனா மற்றும் இஸ்லாமியப் புனிதத் தலங்களை குறிவைப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜேர்மனியில் ரகசியமாக நடந்த கூட்டம் ஒன்றில் ஹவுதிகளுக்கு எதிராகக் களமிறங்க அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இக்கூட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரைத் தொடங்கியதிலிருந்து, இது போன்ற ரகசியக் கூட்டம் முதல் முறையாகும்.