விரைவில் விற்பனைக்கு வரும் Nothing Phone 2: விலையை கேட்டு அதிர்ச்சியடையும் பயனர்கள்
Nothing Phone 1 சமீபத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி பயனர்களை ஈர்த்து இருந்த நிலையில், அடுத்த மாதம் Nothing Phone 2 விற்பனைக்கு வர உள்ளது.
Nothing Phone 2
ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் கால்பதித்து லட்சக்கணக்கான பயனர்களை ஈர்த்து இருந்த Nothing Phone 1, ஜூலை 11ம் திகதி Nothing Phone 2-வை வெளியிட உள்ளது.
இதற்கிடையில் Nothing Phone 2 வெளியாவதற்கு முன்பே அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து கசிந்த தகவல்கள் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nothing Phone 1 ஸ்மார்ட் போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் Nothing Phone 2 விலை 76,500 ரூபாயாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிறப்பம்சங்கள்
65,600 ரூபாயாக இருக்கலாம் என கூறப்படும் Nothing Phone 2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC பிராசசரில் இயங்கும் என்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
76,500 ரூபாயாக இருக்கலாம் என கூறப்படும் Nothing Phone 2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC பிராசசரில் இயங்கும் என்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் 42,000 முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் Nothing Phone 2 ரூபாய் 76,000க்கு விற்பனை செய்யப்படுவது சற்றும் அதிக விலை என்று பயனர்கள் கருதுகின்றனர்.
ஜூலை 11 திகதி வெளியாக இருக்கும் இந்த Nothing Phone 2 பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என Nothing ஸ்மார்ட்போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |