இதற்கும் எங்களது குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.., ஆதவ் அர்ஜுனாவின் மனைவி அறிக்கை
ஆதவ் அர்ஜுனாவின் அரசியலுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவரது மனைவி டெய்சி அறிக்கை வெளியிட்டார்.
ஆதவ் அர்ஜுனாவின் மனைவி அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் சுதந்திரமாக எடுக்கப்படுகின்றன, அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
எங்களுக்கு எதிராக பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் யூகங்களை தவிர்க்குமாறு கோருவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நாங்கள் இருவரும் தனித்தனியான வேலை வாழ்க்கையுடன் தனிப்பட்ட பார்வைகளைக் கொண்டுள்ளோம். எங்களின் தனியுரிமையையும், கருத்துக்களையும் நாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கிறோம். மற்றபடி பொய்யான கூற்றுக்களை யாரேனும் கூறினால் நாங்கள் எதிர்ப்போம்.
எங்களின் பரஸ்பர நலனுக்காக, தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் எங்களை சிக்க வைப்பதை தவிர்க்குமாறு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை மரியாதையுடன் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவருக்கு தவெகவில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லொட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |