ஆரோக்கியமாக இருந்த பெண் இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளால்தான் உயிரிழந்தார்: வெளியான அதிர்ச்சி தகவல்
ஆரோக்கியமாக இருந்த ஒரு பிரித்தானிய பெண், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் பக்க விளைவுகளால்தான் உயிரிழந்தார் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற இடத்தில் வாழ்ந்து வந்த, மூன்று பிள்ளைகளின் தாயாகிய Tanya Smith (43), இந்த ஆண்டு, (2021 ஆம் ஆண்டு) மார்ச் மாதம் 21ஆம் திகதி, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, Tanyaவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆகவே, அவர் Derriford மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
Tanyaவின் மரணத்துக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக Ian Arrow என்ற விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
Tanyaவின் உடற்கூறு ஆய்வில், அவரது உடலில் பல இரத்தக்கட்டிகள் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றவர்கள் சிலருக்கு ஏற்கனவே இதுபோல் இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது உலகம் அறிந்ததே.
விசாரணைக்குப்பின், Tanyaவின் மரணத்துக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியான Ian Arrow, Tanya, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உருவான பக்க விளைவுகளான இரத்தக்கட்டிகள் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tanya தடுப்பூசி பெறுவதற்கு முன், அவருக்கு வேறு எந்த உடல் நல பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.