இவர்கள் கனேடிய குடியிருப்பு அனுமதி பெறுவது இனி எளிது: புலம்பெயர்தல் துறை அமைச்சர் அறிவிப்பு
கனடாவில், தற்காலிக விசாவில் பணியாற்றும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள், இனி எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடா முழுவதும் தகுதியான மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், புலம்பெயர் மருத்துவர்களுக்கு இந்த செய்தி ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.
கனடாவில், தற்காலிக விசாவில் பணியாற்றும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள், இனி எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
கனடாவில் பணிபுரியும் மருத்துவர்கள் பலர், சுயவேலை செய்வதாகவே கருதப்படுகிறார்கள். ஆகவே, அவர்களால் எக்ஸ்பிரஸ் அனுமதியின் கீழ் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.
அதே நேரத்தில், வெளிநாட்டிலோ அல்லது கனடாவிலோ ஒரு ஆண்டு பணி அனுபவமாவது கொண்ட ஒரு சுயவேலை செய்பவருக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் தகுதியான மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. கோவிட் காலகட்டத்தால் அந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தடையை நீக்குவது, மருத்துவர்கள் கனடாவில் வாழ அனுமதிப்பதற்கு ஒரு சமிக்ஞையாக அமையும் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser.