பிரித்தானியாவில் நடுங்கவைக்கும் சம்பவம்... சாலையில் நடந்த கொடூரம்: வாகனத்தால் மோத முயன்ற நபர்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என கருதப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூவர் மீது மோதிய விவகாரம்
நாட்டிங்ஹாம் பகுதியில் இல்கெஸ்டன் சாலை அருகே இன்று பகல் 4 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சம்பவம் மில்டன் தெரு பகுதியில், வாகனம் ஒன்றுடன் மூவர் மீது மோதிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
Credit: BPM
தொடர்புடைய சம்பவத்தில் மூவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மக்தலா சாலையில் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 31 வயது நபர் ஒருவரை கைது செய்த பொலிசார், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் என தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Credit: BPM
போக்குவரத்துக்கு அனுமதியில்லை
சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், என்ன நடந்தது என்பது தொடர்பில் தற்போது தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணையின் ஒருபகுதியான சில சாலைகள் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளனர். Ilkeston Road, Milton Street, Magdala Road, Maples Street, Woodborough Road ஆகியவை மூடப்பட்டுள்ளது.
Credit: BPM
இதனிடையே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சந்தேக நபரை பொலிசார் சாமர்த்தியமாக கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
I want to thank the police and emergency services for their ongoing response to the shocking incident in Nottingham this morning.
— Rishi Sunak (@RishiSunak) June 13, 2023
I am being kept updated on developments. The police must be given the time to undertake their work.
My thoughts are with those injured, and the…