பிரித்தானியாவில் பரிதாபமாக பலியான இலங்கை மாணவர்
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான இலங்கை மாணவர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சம்பவயிடத்திலேயே மரணம்
நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada Jayasundera என்பவர் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.
Credit: Nottingham Police
இந்த விவகாரத்தில் 27 வயது Joshua Gregory என்பவர் கைதாகியுள்ளதுடன், அவர் மீது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியது மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் மரணத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர் தங்களது இழப்பிற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
எங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினரான ஓஷத ஜயசுந்தர விபத்தில் மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அறிந்து எங்கள் இதயம் வருத்தத்தால் கனக்கிறது.
நீதி நிலைநாட்டப்படும் என
மேலும் இந்த இக்கட்டான சூழலில் ஆதரவளித்த நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறை ஊழியர்கள், நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழக ஊழியர்கள், பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கை வெளிவிவகார அமைச்சரகம் மற்றும் நண்பர்கள் உற்றார்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
@bbc
அத்துடன், ஓஷதாவின் நினைவைப் போற்றும் வகையில் இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று பொலிஸ் துரத்தியதால் அசுர வேகத்தில் பாய்ந்த 27 வயது Joshua Gregory என்பவரின் வாகனம், பாதசாரியான ஓஷத ஜயசுந்தர மீது மோதியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 3.20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |