கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்... அச்சத்தின் பிடியில் நகர மக்கள்
கனேடிய நகரம் ஒன்றில் இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம், அந்நகரில் வாழும் இந்திய சமூகத்தினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Prabhjot Singh (32), கனடாவின் Nova Scotiaவிலுள்ள Truro என்னும் சிறிய நகரத்தில் வாழ்ந்துவந்த இந்திய இளைஞர். பகுதிநேர டாக்சி சாரதியாக பணிபுரிந்துவந்த Prabhjot கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் படுகாயமடைந்த நிலையில் இரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. தனது காயங்கள் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
பொலிசார் அவர் தாக்கப்பட்ட விதம் குறித்தோ காயங்கள் குறித்தோ எதுவும் விளக்கவில்லை. ஆனால், Prabhjot பயங்கரமாக கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், Truroவில் கடந்த வெள்ளிக்கிழமை Prabhjotக்கு நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கூடினார்கள். ’நாங்கள் பயந்திருக்கிறோம்’ என எழுதப்பட்ட பதாகைகளுடன் பலர் நின்றிருந்தார்கள்.
Prabhjot தன் வீட்டுக்கு அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அதுதான் எங்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் Prabhjotஇன் நண்பரான Jobandeep Singh. நேற்று அவருக்கு நடந்தது, நாளை எங்களில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் அவர்.
இந்த சம்பவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், இரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பாதிப்பேர் இந்திய சமூகத்தினர் அல்ல, அவர்கள் Truroவில் வாழும் இந்திய சமூகத்தினர் அல்லாதவர்கள். அவர்கள் தங்களுடன் வாழும் இந்தியர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காக அங்கு கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், Prabhjotஇன் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்காக அவரது சகோதரியான Kaur நிதியுதவி கோரியிருந்த நிலையில், இலக்குத் தொகையான 50,000 டொலர்கள் வெகு சீக்கிரத்தில் எட்டப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.