9 மணி நேரம் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா: விசா ரத்தாக இதுதான் காரணம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு, மெல்போர்ன் விமான நிலை சென்ற நோவாக் ஜோகோவிச் திருப்பி அனுப்பட உள்ளார். அவரது விசா ரத்து செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெல்போர்ன் விமான நிலையத்தில் சுமார் 9 மணி நேரம் காத்திருக்க வைத்திருந்த நிலையில், தற்போது விசாவை ரத்து செய்து திருப்பி அனுப்புவதாக அவுஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நோவக் ஜோகோவிச் வியாழக்கிழமை அங்கிருந்து புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய போதுமான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்க தவறியதாக கூறியே திருப்பி அனுப்பப்படுவதாக சுகாதார அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜர் ஃபெடரர், நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார் ஜோகோவிச். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.
தற்போது இம்மாதம் நடைபெறும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஜோகோவிச் மெல்போர்ன் சென்றுள்ளார். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொந்தற்கான தரவுகளை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என ஜோகோவிச் வாதிட்டுள்ளார். மட்டுமின்றி, தடுப்பூசி பெற தகுதியான நபர் அல்ல என மருத்துவர்களின் சான்றிதழும் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பெடரல் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது என்பதால், மாகண நிர்வாகம் அவருக்கு விளையாட அனுமதி அளித்தும், தடுப்பூசி கட்டாயம் என்பதில் விதிவிலக்கு அளிக்க முடியாது எனக் கூறி அவரது விசாவை ரத்து செய்துள்ளது அவுஸ்திரேலிய நிர்வாகம்.