ஜோகோவிச் விசா ரத்து: அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட உத்தரவை நீக்கி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 17ம் திகதி அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான மருத்துவ காரணங்களுடன் ஜோகோவிச் ஆவணங்கள் அளித்த நிலையிலும், அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
தொடர்ந்து குடியேற்றத் துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஹொட்டலுக்கு அனுப்பப்பட்டார், இதுதொடர்பாக ஜோகோவிச் நீதிமன்றத்தை நாடிய நிலையில், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை திருப்பி தரவும், தடுப்பு காவல் மையத்திலிருந்து விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்து குடியேற்றத்துறை அமைச்சர் விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு வழக்கறிஞர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.