வரி குறைப்பு.., இனி குறைவான கட்டணத்தில் ஹொட்டல்களில் தங்கலாம்
இந்திய அரசின் நடவடிக்கையால் இனி மலிவான கட்டணத்தில் ஹொட்டல்களில் தங்கலாம்.
வரி குறைப்பு
ஹொட்டல் அறைகளுக்கான வரியைக் ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இப்போது ரூ.7,500 வரை வாடகை உள்ள ஹொட்டல் அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும்.
முன்னதாக, இவற்றுக்கு 12% வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த புதிய விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் பொருந்தும்.இதனால் விடுமுறை நாட்களைக் கொண்டாடுவது மலிவாகிவிடும்.
வரி குறைப்பு மூலம் ஹொட்டலில் தங்குவது எளிதாகிவிடும் என்று கூறியுள்ள ஓன்லைன் முன்பதிவு தளமான மேக்மைட்ரிப்பின் இணை நிறுவனர் ராஜேஷ் மாகோ, தங்குவதற்கான செலவு குறைவாக இருக்கும்போது, மக்கள் அதிகமாக பயணம் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஹொட்டல் தொழிலதிபர்களும் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர். இந்த நடவடிக்கை இந்தியாவை ஒரு பெரிய சுற்றுலா மையமாக முன்னோக்கி கொண்டு செல்லும் என்று ரேடிசன் ஹோட்டல் குழுமத்தின் தெற்காசியத் தலைவர் நிகில் சர்மா கூறுகிறார்.
அதே நேரத்தில், ஹொட்டல் மற்றும் உணவக சங்கத்தின் (FHRAI) தலைவர் கே. ஷியாமா ராஜு கூறுகையில், ஹொட்டல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |