சொந்த ஊருக்கு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்: இடுப்பிலிருந்த துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் ஒருவர், தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிநாடு வாழ் இந்தியர்
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரின் தானி சுச்சா சிங் கிராமத்தில் குடியேறியவர் ஹர்பிந்தர் சிங் என்கிற சோனு.

வெளிநாடு வாழ் இந்தியரான இவர் தனது சொந்த ஊருக்கு வந்தபோது, உறவினர் ஒருவருடன் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் எழுந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்துள்ளது.
வயிற்றில் பாய்ந்த குண்டு
இதில் ஒரு குண்டு அவரது வயிற்றில் பாய்ந்ததையடுத்து, உடனடியாக ஹர்பிந்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அவர் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் அவரை உடலைக் கைப்பற்றிய பொலிசார், உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |