நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி மரணம்! மீளாத்துயரில் உறவுகள்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தேவா மறைந்தார்.
தேவா இன்று இன்று (25-05-2021) அதிகாலை, சேலம் ஆத்தூர், இராமநாயக்க பாளையத்தில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என நாம் தமிழர் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தேவாவின் இறுதி சடங்கு இன்று மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவாவின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கண்ணீர் வணக்கம்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 25, 2021
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.தேவா அவர்கள் இன்று (25-05-2021) அதிகாலை, சேலம் ஆத்தூர், இராமநாயக்க பாளையத்தில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற துயரச்செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். pic.twitter.com/JPmquOyFws