ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உலக நாடுகளின் பதில் எவ்வாறு இருக்கும்? EU பிரதிநிதி அறிவிப்பு
ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல் அணு ஆயுதத்தை தூண்டாது.
ஆனால் சக்திவாய்ந்த இராணுவ பதிலடி ஒன்று கொடுக்கப்படும் என EU பிரதிநிதி தகவல்.
உக்ரைனுக்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதல் அணு ஆயுதத்தை தூண்டாது என ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ராணுவ படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால், புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதலை மாற்றியமைக்க புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
A nuclear attack against #Ukraine will not provoke a nuclear, but a powerful military response, - #EU High Representative for Foreign Affairs and Security Policy Josep Borrell. pic.twitter.com/d4y1mg16td
— NEXTA (@nexta_tv) October 13, 2022
இதனால் ஜனாதிபதி புடினின் நகர்வுகளை உலக தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், ரஷ்யா மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தினாலும், பதிலுக்கு உலக நாடுகள் மீண்டும் அணு ஆயுதத்தை திரும்ப பயன்படுத்தாது என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தோழியை கொன்று சூட்கேஸில் அடைத்த பிரித்தானிய பெண்: பெட்டியுடன் லண்டன் வீதிகளில் சுற்றி திரிந்த பயங்கரம்!
ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான சக்திவாய்ந்த இராணுவ பதிலடி நிச்சயமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.