பிரித்தானியாவை விட இருமடங்கு பரப்பளவை தகர்க்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணை! சோதனைக்கு தயாரான ரஷ்யா
சுமார் 6,200 மைல்கள் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய பிரம்மாண்ட ஏவுகணையான RS-28 Sarmat doomsday missile-ஐ ரஷ்யா சோதனை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
16 warhead-களை சுமந்து மணிக்கு 15,000 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணையின் மூலம் உலகில் எந்த ராணுவத்தையும் சமாளிக்கக்கூடியது என்றும், இதனை ஏவினால் அமெரிக்காவின் Texas மாகாணமானத்தையே அழிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னால் 3 warhead-களை சுமந்து செல்லக்கூடிய R-36 ரக ஏவுகணையை மாற்றியமைக்கும் விதமாக 200 டன் எடை கொண்ட இந்த RS-28 Sarmat ஏவுகணையை ரஷ்யா நிறுவியுள்ளது.
ரஷ்யாவின் இந்த RS-28 அணு ஆயுத ஏவுகணை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் மீது போடப்பட்ட ஹிரோஷிமா & நாகசாகி அணுகுண்டுகளை விட 400 மடங்கு சக்திவாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இது பிரித்தானியாவைப் போன்ற 2.8 மடங்கு பரப்பளவை ஒரே தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கக்கூடியது.
