விளாடிமிர் புடினுடனான போர் 5 பில்லியன் மக்களை பாதிக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
விளாடிமிர் புடினுடனான அணு ஆயுத போர் அபாயம் சமீபத்திய நாட்களில் அதிகரித்தே வருகிறது.
அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், மொத்தமாக 200 முதல் 300 மில்லியன் மக்கள் அழிவார்கள்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான அணு ஆயுத போரால் உலகம் முழுக்க 5 பில்லியன் மக்கள் மொத்தமாக அழிந்து போகும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போரின் விளைவாக பல ஆண்டுகளுக்கு சூரியன் மறைக்கப்படும் வாய்ப்பும் அதிகம் என எச்சரித்துள்ளனர். விளாடிமிர் புடினுடனான அணு ஆயுத போர் அபாயம் சமீபத்திய நாட்களில் அதிகரித்தே வருகிறது.
@reuters
இந்த நிலையில், போர் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், பனிப்போர் காலத்திலேயே உலக நாடுகளை பல முறை அழிக்கவல்ல அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் சேகரித்து வைத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அதன் உண்மை நிலவரம் வெளிவந்துள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 12,000 அணு ஆயுதங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் மட்டுமே 6,000 அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அதன் தாக்கத்தால் மட்டுமே உலகம் மொத்தமாக 200 முதல் 300 மில்லியன் மக்கள் கொத்தாக அழிவார்கள். அணு ஆயுத பயன்பாட்டால் உடனடி மரணம் ஒருபக்கம் என்றால், அதனால் ஏற்படும் விளைவுகளால் பல ஆண்டுகளுக்கு சூரியன் பாதிக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வொன்றை வெளியிட்டுள்ளனர்.
@AP
இதனால், மொத்தமாக உலக மக்கள் தொகையில் பெரும்பகுதி, அதாவது 5 பில்லியன் மக்கள் வரையில் இறக்க வாய்ப்பிருப்பதாக முதன்மை நிபுணர்கள் பலர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உக்ரைன் போன்ற உலக நாடுகளுக்கு பசியாற்றும் ஒரு தேசம் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால், உலகம் மொத்தம் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். மட்டுமின்றி, உலகளவில் வெப்பநிலை 16C வரை குறையும் வாய்ப்பிருப்பதால், விவசாயம் பாதிக்கும், இதனால் கடுமையான பஞ்சம் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யாவிடம் 6,000 அணு ஆயுதங்கள் கைவசமிருக்கும் நிலையில், அமெரிக்காவிடம் 5,400 அணு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவில் 225 எனவும், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன.
மேலும், ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களில் பெரும்பாலானவை பனிப்போர் காலத்தில் தயாரிக்கப்பட்டவை எனவும், அதன் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் இல்லை என்றே கூறுகின்றனர்.