இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படும்! ஐரோப்பிய நாடொன்றை எச்சரித்த ரஷ்யா
நேட்டோ அணு ஆயுதங்கள் அல்லது தளங்கள் போலந்தில் குவிக்கப்பட்டால் அவை இராணுவ அச்சுறுத்தலாக பார்க்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா எச்சரிக்கை
போலந்து நாட்டில் நேட்டோ அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டால் அவை இராணுவ அச்சுறுத்தலாக பார்க்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
துணை வெளியுறவு அமைச்சர் Sergey Ryabkov, அரச தலைமையிலான டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ரஷ்ய எல்லைக்கு அருகில் நடைபெறும் கூட்டு நேட்டோ அணு ஆயுதப் பயிற்சிகள் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் என்றார்.
"போலந்து அதிகாரிகள் பேசிவரும் நிரந்தர குவிப்பு குறிப்பாக கவலைப்பட வேண்டியது" என்று அவர் கூறுகிறார்.
"இந்த விருப்பத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.,இது போன்ற நடவடிக்கைகள் போலந்து நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தாது, மேலும் தொடர்புடைய வசதிகள் தவிர்க்க முடியாமல் தாக்குதல் இலக்காக இருக்கும். அவை எங்கள் இராணுவ திட்டமிடலில் முன்னணியில் இருக்கும்" என்றார்.
போலந்து ஜனாதிபதியின் முடிவு
அண்மையில் போலந்து ஜனாதிபதியின் ஆண்ட்ஜெய் டூடா(Polish President Andrzej Duda), ரஷ்யா பெலாரஸில் இதே போன்ற ஆயுதங்களை குவிப்பதற்கு பதிலடி நடவடிக்கையாக நேட்டோ உறுப்பு நாடுகளின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு போலந்து தயாராக இருக்கும் என்று தெரிவித்தார்.
"நேட்டோவின் கிழக்கு பக்க பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அணு ஆயுத பகிர்வு திட்டத்தில் எங்கள் நேட்டோ கூட்டாளிகள் அணு ஆயுதங்களை குவிக்க முடிவு செய்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று டூடா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |