"உன் சாவுக்கு நாள் குறிச்சாச்சு" கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த செவிலியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (56) தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண்மணி.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் ஆகிய சிறப்புகளை பெற்றவர்.
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு சில நாட்களாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த செவிலியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புளோரிடாவை சேர்ந்த செவிலியர் Niviane Petit Phelps (39). இவர் 2001-ஆம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் சிறையில் உள்ள தனது கணவருக்கு JPay மூலம் வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறையில் உள்ள கைதிகளை அவரது குடும்பத்தினருடன் இணைத்து JPay என்ற கணினி பயன்பாடு மூலம் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. Niviane Petit Phelps தனது கணவருக்கு அனுப்பிய வீடியோவில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸார் Niviane Phelps மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில் கூறி இருப்பதாவது,
பிப்ரவரி 13-ஆம் திகதி முதல் பிப்ரவரி 18-ஆம் திகதி வரை நிபியன் பெட்டிட் அனுப்பிய வீடியோவில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது கொலை மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார்.
அதிபர் ஜோபைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மீதான வெறுப்பை பற்றி பேசுகிறார். மேலும் கமலா ஹாரிசை கொல்வது பற்றியும் பேசி உள்ளார்.
ஒரு வீடியோவில் கமலா ஹாரிஸ் நீங்கள் இறக்க போகிறீர்கள். உங்கள் நாட்கள ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டன என பேசி உள்ளார்
பிப்ரவரி 18-ஆம் திகதி அனுப்பப்பட்ட என்றும் மற்றொரு வீடியோவில், நான் துப்பாக்கி வாங்க செல்கிறேன். நான் கடவுளிடம் சத்தியம் செய்கிறேன். இன்றிலிருந்து 50 நாட்களில் நீங்கள் (கமலா ஹாரிஸ்) இறக்கப் போகிறீர்கள். இந்த நாளை குறித்துவைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ரகசிய சேனல் விசாரணை நடத்தி வந்தது. செவிலியர் Niviane Petit Phelps-ன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.