பல கனவுகளுடன் பிரித்தானியாவுக்கு வந்த இளம் தாயாருக்கு நர்ஸ் ஒருவரால் ஏற்பட்ட துயரம்
பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் சாலை விபத்தை ஏற்படுத்தி இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான நர்ஸ் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் பகுதியில்
செவிலியரான 27 வயது ரோமீசா அகமது என்பவரே சாலை விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவிக்க இருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லீட்ஸ் பகுதியில் தொடர்புடைய விபத்து நடந்துள்ளது.
இரவுப்பணியை முடித்துக் கொண்டு குடியிருப்புக்கு விரைந்த ரோமீசா அகமது சம்பவத்தின் போது இந்தியரான 28 வயது ஆதிரா அனில்குமார் என்பவர் மீது மோதியதுடன், பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருந்த இன்னொரு நபர் மீதும் மோதியுள்ளார்.
ஒரு குழந்தையின் தாயாரான ஆதிரா அனில்குமார் இந்தியாவில் இருந்து பிரித்தானியா திரும்பிய சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல கனவுகளுடன் பிரித்தானியாவுக்கு வந்த ஆதிரா குமார் Leeds-Beckett பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு இணையவும் முடிவெடுத்திருந்தார். ஆனால் ஆதிராவின் கனவுகள் மொத்தம் ரோமீசா அகமதுவால் சிதைந்தது.
தலையில் ஏற்பட்ட
மணிக்கு 40 மைல்கள் பயணிக்க வேண்டிய சாலையில் அகமது மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் பயணித்துள்ளார். மட்டுமின்றி, பயணத்தின் போது தனது அலைபேசியை பயன்படுத்தியுள்ளார்.
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட ஆதிரா, ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவை மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், தலையில் ஏற்பட்ட மிக மோசமான காயம் காரணமாக ஆதிரா மரணமடைந்திருந்தார்.
ஏற்கனவே ஜூலை 2023 மற்றும் அக்டோபர் 2023ல் வாகனம் ஓட்டுவதில் தடை பெற்றிருந்தவர் அகமது என்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |