Nvidia CEO Jensen Huang-ஐ சுற்றியுள்ள உளவு புகார்கள்: யார் இந்த ஆலிஸ் ஹவாங்?
Nvidia CEO Jensen Huang Espionage Case: who is Alice Huang?: Nvidia நிறுவனத்தின் CEO ஜென்சன் ஹவாங்-கை உளவு பார்த்ததாக கூறப்படும் ஆலிஸ் ஹவாங் பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளது.
Nvidia CEO Jensen Huang-ஐ சுற்றியுள்ள உளவு புகார்கள்
Nvidia நிறுவனத்தின் CEO-வான 63 வயது ஜென்சன் ஹவாங்(Jensen Huang), ஆலிஸ் ஹவாங்(Alice Huang) என்ற பெண்ணுடன் தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஆலிஸ் ஹவாங் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் முகவராக செயல்பட்டு வந்ததாக அமெரிக்க உளவுத் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
CNN reports on Jensen Huang and his extramarital affair partner Alice Huang...Note the language Financial Times uses: ‘romantic relationship’… https://t.co/M45Nt5Iabq
— luke (@realLuke007) November 8, 2026
சீன சந்தைகளுக்கான Nvidia நிறுவனத்தின் நவீன செயற்கை நுண்ணறிவு குறைக்கடத்தி (AI Semiconductor) தொழில்நுட்பத்தை பெறுவதற்கும், உயர் ரக சிப்களின் விநியோகத்தில் செல்வாக்கை செலுத்தவும் இந்த உளவு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.
யார் இந்த ஆலிஸ் ஹவாங்?
ஹவாங் லே என்று அறியப்பட்டவரான ஆலிஸ் ஹவாங்(Alice Huang) மார்ச் 2023ம் ஆண்டு சிங்கப்பூரை தளமாக கொண்ட 7 Road International என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
பின் அந்த நிறுவனம் Megaspeed என்று பெயர் மாற்றப்பட்டு அதன் உரிமைகள் அனைத்தும் Huang Le Limited என்ற நிறுவனத்திற்கு முழுமையாக மாற்றப்பட்டது.
மேலும் அதே ஆண்டு நவம்பரில் புதிதாக தொடங்கப்பட்ட Swiftdata என்ற நிறுவனம் இதன் கட்டுப்பாட்டை பெற்ற நிலையில், ஆலிஸ் ஹவாங் தன்னுடைய இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.
黄仁勋和情人Alice Huang更多照片首次曝光 https://t.co/2zOmMkOBcm
— 大厂白洁 (@santoulang) November 9, 2026
பின்நாட்களில் என்விடியா நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளராக Megaspeed நிறுவனம் உருவெடுத்தது.
ஆலிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் Nvidia CEO Jensen Huang உடனான நட்பை பயன்படுத்தி முதலீடுகளை திரட்டியதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும் இந்த முதலீடுகளில் சீன ராணுவத்தின் ஒப்பந்த நிறுவனமான சீனா எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷனின்(CETC) துணை நிறுவனத்தின் பங்குகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ மறுப்பு
இந்நிலையில் உளவு குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருப்பதுடன், புகார் அனைத்தையும் ஆதாரமற்ற அவதூறுகள் என்று விமர்சித்துள்ளது.
மேலும் ஆலிஸ் ஹவாங் மீதான உளவு புகார்கள் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்திகளை சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.