அமெரிக்காவில் பட்டப்பகலில் குழந்தையை கடத்த முயன்ற வீடற்ற நபர்! வெளியான பரபரப்பான சிசிடிவி காட்சி
அமெரிக்காவில் ஒரு பிரதான சாலையில் பாட்டியுடன் சாலையில் கடக்க முயன்ற 3 வயது குழந்தையை, திடீரெனெ வந்த வீடற்ற நபர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் Bronx பெருநகரத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் சிகிச்சை அளிக்கப்படாத மனநலப் பிரச்சினைகளுடன் வீடற்ற நபர்கள் செய்யும் வன்முறை குற்றங்கள் அதிகரித்ததுள்ளன.
திங்கட்கிழமை மதியம் 1.12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு 65 வயதான மூதாட்டி தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சாலையை கடக்க நடந்து செல்கிறார்.
அப்போது அங்கே வந்த ஒரு வீடற்ற நபர், 3 வயது பெண் குழந்தையை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். பதறிப்போன அந்த 65 வயது பாட்டி உடனடியாக தனது பேத்தியை காப்பாற்ற அவனை துரத்திக்கொண்டு செல்கிறார்.
அப்போது, அந்த வழியே சென்ற காரிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர் குழந்தையை காப்பாற்ற உதவினார். பின்னர் அந்த சந்தேக நபர் குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து சாதாரணமாக நடந்து சென்றார்.
இதனையடுத்து, குழந்தையை அபகரித்த அந்த நபரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். சாண்டியாகோ சால்செடோ (Santiago Salcedo) 27, என்று அறியப்படும் அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கடத்தல், கடத்தல் முயற்சி, சட்டவிரோதமாக சிறைபிடித்தல் மற்றும் குழந்தைக்கு ஆபத்து விளைவித்த குற்றங்களுக்காக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில், நியூயார்க் நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 50,000 வீடற்ற நபர்கள் வாழவதாக தெரியவந்துள்ளது.
அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் நகராட்சி முகாம்களில் தூங்கும் ஒற்றை பெரியவர்களின் எண்ணிக்கை 103 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை அளிக்கப்படாத மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக அறியப்படுகின்றனர்.
இந்த நிலையில், இவர்களை போன்ற சில நபர்களால் நகரத்தில் அச்சுறுத்தலான பல குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.




