இங்கிலாந்து அணிக்கு திருப்பி கொடுத்த நியூசிலாந்து! சிக்ஸர் மன்னனுக்கு தொடர் நாயகன் விருது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி டி20 போட்டி
நாட்டிங்காமின் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சிக்ஸர்களை பறக்க விட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், பேர்ஸ்டோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
Lift off at Trent Bridge. Jonny Bairstow is flying! ? #EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/YiMLtgapJ8
— England Cricket (@englandcricket) September 5, 2023
இதன்மூலம் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. பேர்ஸ்டோவ் 41 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.
சான்ட்னர் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து வெற்றி
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 16 ஓட்டங்களில் வெளியேறினார். மிட்செல் 14 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
எனினும் டிம் செய்பெர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியில் மிரட்டினர். 32 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த செய்பெர்ட், ரெஹான் அஹ்மத் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Twitter (@BLACKCAPS)
அடுத்து பிலிப்ஸ் 42 (25) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மார்க் சாப்மேன் 40 (25) ஓட்டங்களும், ரச்சின் ரவீந்திரா 17 (9) ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
Twitter (@BLACKCAPS)
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. நான்கு போட்டிகளில் 175 ஓட்டங்கள் எடுத்த சிக்ஸர் மன்னன் பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருதை வென்றார்.
Player of the Series ?
— England Cricket (@englandcricket) September 5, 2023
Runs: 1️⃣7️⃣5️⃣
Average: 5️⃣8️⃣.3️⃣3️⃣
Congratulations, @JBairstow21 ?#EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/JGK5yk0Rz5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |