மழையால் 15 ஓவர் போட்டி: பாகிஸ்தான் பந்துவீச்சை வேட்டையாடிய இருவர்..நியூசிலாந்து அபார வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சல்மான் அஹா 46
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டியூன்டினில் நடந்தது.
மழை காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 15 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் குவித்தது.
Seifert has 7 letters, so does Maximum 🤌
— FanCode (@FanCode) March 18, 2025
Tim Seifert took Shaheen Afridi to the cleaners in his second over, smashing four sixes in it 🤯#NZvPAK pic.twitter.com/F5nFqmo7G6
அணித்தலைவர் சல்மான் அஹா 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் விளாசினார்.
ஷதாப் கான் 26 (14) ஓட்டங்களும், ஷாஹீன் அப்ரிடி 22 (14) ஓட்டங்களும் எடுத்தனர். ஜேக்கப் டுஃபி, பென் சியர்ஸ், நீஷம் மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செய்பெர்ட் மற்றும் பின் ஆலென் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
நியூசிலாந்து சிக்ஸர் மழை
டிம் செய்பெர்ட் (Tim Seifert) 22 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, சிக்ஸர் மழை பொழிந்த பின் ஆலென் (Finn Allen) 16 பந்துகளில் 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 38 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து வந்த சாப்மன் 1 ரன்னில் வெளியேற, நீஷம் 5 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
எனினும் அதிரடி காட்டிய மிட்சேல் ஹே ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுக்க, நியூசிலாந்து 13.1 ஓவரில் 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Two back-to-back Ws 🤌
— FanCode (@FanCode) March 18, 2025
The Kiwis put on another utterly dominant display in the 2nd T20I to double their lead in the series 🫡#NZvPAK pic.twitter.com/VMPxkFK2Ys
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |