டி20யில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்திய நீஷம்! கடைசிப் போட்டியிலும் பாகிஸ்தான் பரிதாப தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சல்மான் அஹா அரைசதம்
வெல்லிங்டனில் நடந்த கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தது. எனினும், பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் சல்மான் அஹா 39 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் நீஷம் ஓவரில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்களே எடுத்தது. ஷதாப் கான் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜேம்ஸ் நீஷம் மிரட்டல்
பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக விளங்கிய ஜேம்ஸ் நீஷம் (James Neesham) 5 விக்கெட்டுகளை முதல் முறையாக கைப்பற்றினார்.
Finishing the KFC T20I series with a bang! Tim Seifert (97*) finishes off a clinical all-round performance as the BLACKCAPS win the series 4-1. Catch up on the scores | https://t.co/TZTAt6S23R 📲 #NZvPAK #cricketnation pic.twitter.com/P96yGhh8oy
— BLACKCAPS (@BLACKCAPS) March 26, 2025
அதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, டிம் செய்பெர்ட்டின் அதிரடி ஆட்டத்தில் 10 ஓவரிலேயே 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வாணவேடிக்கை காட்டிய டிம் செய்பெர்ட் (Tim Seifert) 38 பந்துகளில் 10 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |