88 ரன்களுக்கு 8 விக்கெட்: 168 வரை வந்தும் தோல்வி..சோதித்த சோதி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20யில் நியூசிலாந்து அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கான்வே 56 ஓட்டங்கள்
சாக்ஸ்டனில் நடந்த டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. ராபின்சன் 23 ஓட்டங்களிலும், ரச்சின் ரவீந்திரா 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 
எனினும் அரைசதம் விளாசிய டிவோன் கான்வே (Devon Conway) 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த டேர்ல் மிட்செல் 24 பந்துகளில் 41 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) விளாச, நியூசிலாந்து அணி 177 ஓட்டங்கள் சேர்த்தது.
ஷெப்பர்ட்,ஸ்ப்ரின்கர் வாணவேடிக்கை
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணியில் அதனசி (31), அகஸ்டி (24) தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் வெளியேறினர். அப்போது அணியின் ஸ்கோர் 88 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் என்று இருந்தது.
ஆனால் ரோமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷாமர் ஸ்ப்ரின்கர் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
வெற்றிக்காக போராடிய ரோமாரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) 34 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஷாமர் ஸ்பிரின்கர் (Shamar Springer) 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார். 
ஜேக்கப் டுஃபி, இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |