களத்தில் கண்ணீருடன் நுழைந்து சிரிப்புடன் விடைபெற்ற நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர்!
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் தனது இறுதி ஆட்டத்தில் கண்ணீருடன் நுழைந்து சிரிப்புடன் மைதானத்தை விட்டு வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.
திங்கள்கிழமை ஹாமில்டனில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்து இருந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் கண்ணீருடன் நுழைந்து சிரிப்புடன் மைதானத்தை விட்டு வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இசைக்கப்படும் தேசிய கீதங்களுக்காக டெய்லர் தனது மூன்று குழந்தைகளான மெக்கென்சி, ஜான்டி மற்றும் அடிலெய்டு ஆகியோருடன் மைதானத்தில் நுழைந்தார்.
Ross Taylor got emotional during national anthem. pic.twitter.com/KfaKnaVr8i
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 4, 2022
அப்போதே மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக தெரிந்த ராஸ் டெய்லர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உதட்டை கடித்து கொண்டு கண்ணீரை மறைக்க முயற்சி செய்தார்.
இவ்வாறு கண்ணீருடன் மைதானத்திற்குள் நுழைந்த ராஸ் டெய்லர், லோகன் வான் பீக் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 14 ஓட்டங்களில் களத்தில் இருந்து புன்னகையுடன் வெளியேறினார்.
Ends a great career with a catch, Ross Taylor. pic.twitter.com/sG17N4G2k7
— Johns. (@CricCrazyJohns) April 4, 2022
2006இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான ராஸ் டெய்லர் இதுவரை நியூஸிலாந்திற்காக 450 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் டெஸ்ட் போட்டியில் 7,683 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 8593 ஓட்டங்களும் டி20-யில் 1909 ஓட்டங்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் நேர்மை இதுதான்... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!